Coimbatore: Somavara Utsava festival at the Nanjundeswarar temple in Kinathukadavu – Nallattipalayam; Devotees pour salt in front of the closed temple and worship!
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாலையம் கிராமத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சோமவார உற்சவ விழா மூன்று நாட்கள் விமர்ச்சியாக நடைபெறுவது வழக்கம். ஆண்டு தோறும் திறந்திருக்கும் இந்த கோவில் சோமவார விழா நடைபெறும் இந்த மூன்று நாட்கள் மட்டும் மூடியே இருக்கும், இந்து அறநிலையத்துறை இந்த கோவிலுக்கு செயல் அலுவலரை நியமிக்க வழக்கு தொடர்ந்துள்ளது, இதனை எதிர்த்து கோவில் நிர்வாகிகளும் வழக்கு தொடர்ந்துள்ளதால், சோமவார திருவிழாவன்று மூன்று நாட்கள் மட்டும் கோவில் பூட்டப்பட்டும். இருப்பினும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன் உப்பை கொட்டி விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வர்.
இன்று தொடங்கிய சோமவார உற்சவ திருவிழா மூன்று நாட்களுக்கு விமர்ச்சியாக நடைபெறும். முதள் நாளான இன்று கிணத்துக்கடவு, பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் சோமவார உற்சவ விழாவில் கலந்துக் கொண்டு தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். இன்றும் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் திறக்கப்படாமலே இருந்தது. இதனால், பக்தர்கள் பூட்டிய கோவில் முன்பு உப்பை கொட்டி விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர். கோவில் அருகே போடப்பட்டும் கடைகள், ராட்டினங்களில் குழந்தைகள், பெண்கள் விளையாடி மகிழ்ந்தனர். இந்த திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து மூன்று நாட்கள் இயக்கப்படும்.