பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு சேகரிக்க வரும் களப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் : கலெக்டர் தகவல்!

schedule
2023-12-07 | 09:34h
update
2023-12-07 | 09:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Collaborate with field workers to collect social data for differently abled persons in Perambalur District : Collector Information!

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால், “உரிமைகள்“ திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் சமூக தரவு பதிவு நடத்தப்படுகின்றது. அதில் நமது பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று. பெரம்பலூர் மாவட்த்தில் இக்கணக்கெடுப்பு பணியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கக் களப்பணியாளர்களும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை வீடு வீடாகச் சென்று அவர்களின் தகவல்கள் குறித்து களப்பணியாளர்கள் சேகரித்து அவர்களின் தரவுகள் கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 14,000 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதுவரை 4,000 மாற்றுத் திறனாளிகள் குறித்த தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கும் நேரில் சென்று கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எனவே, தங்கள் வீடுதேடி வரும் களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அவர்கள் கோரும் தகவல்களை வழங்க வேண்டும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 21:40:59
Privacy-Data & cookie usage: