முதல் நாளே மனுக்கள் வாங்காமல் மக்களை காக்க வைத்த கலெக்டர்!

schedule
2017-06-05 | 08:51h
update
2026-05-01 | 12:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக நடைபெறும் பொதுமக்கள் குறைத் தீர்க்கும் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு துவங்கி நடந்தது.

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுக்க ஏராளமானோர் வந்திருந்தனர். ஆனால், நேற்று பதவி ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா காலை 11.30 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்ளாமல் அரங்கில் காக்க வைத்தனர்.

Advertisement

உரிய நேரத்தில் வீடு திரும்பி கால்நடைகளை மேய்க்கவும், பல்வேறு பணிகளை பார்க்கவும் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் ஆட்சியர் வருகைக்காக காத்திருந்தனர்.

ஆனால், ஆட்சியர் சாந்தவோ ஒன்றரை மணிநேரத்திற்கு பிறகே கூட்டரங்கிற்கு வந்தார். ஆட்சியர் சாந்தா வந்த பிறகே அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெறத் துவங்கினர்.

ஆட்சியர் காலதாமத்தால் பொதுமக்களின் பொன்னான நேரம் வீணாய் போனது. அலுவலர்கள் பலர் முதல் நாளே இப்படியா என நொந்து கொண்டனர். காலை 11.40 மணிக்கு பிறகே மனுக்களை அலுவலர்கள் பெறத் தொடங்கினார்கள் .

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 12:30:10
Privacy-Data & cookie usage: