Collector Inspection Perambalur police station Order to find immediate solution to belt change petitions!

பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா இன்று திடீரென பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது, அரசு அலுவலர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடு, தன் பதிவேடுகளை பார்வையிட்டார்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா கோருதல், பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் விபரம் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு கலெக்டர் தெரிவித்தாவது: தமிழக அரசு உத்தரவின்படி பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், இ-சேவை மையத்தின் மூலமாகவும், நேரடியாகவும் பெறப்படுகிறது. பொதுமக்களின் கால நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும், பிற இடங்களுக்கு சென்று வருவதை தவிர்ப்பதற்காகவும் இ-சேவை மையத்தின் மூலமாக மனுக்கள் பெறப்படுகிறது. மேலும் பொதுமக்களின் குறைகளை நேரடியாக தீர்க்கும் பொருட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களும் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் சீட்டும் வழங்கப்படுகிறது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய விசாரனை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் பயன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையும் ஆய்வு செய்தார். அப்போது, பெரம்பலூர்ஆர்.டி.ஓ (பொ) ந.சக்திவேல், தாசில்தார்கள் அருளானந்தம், பாரதிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!