பெரம்பலூர் கலெக்டர், திருவாலந்துறை கிராமத்தில் ரூ.2.06 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்!

schedule
2023-05-30 | 16:31h
update
2023-05-30 | 16:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Collector of Perambalur, Thiruvalanturai village provided welfare assistance worth Rs.2.06 crore!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் திருவாலந்துறை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் கற்பகம் ,தலைமையில் இன்று நடந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

Advertisement

அரசுத்துறைகளின் சார்பில் மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களால் பயன்பெற எந்த அலுவலரை அணுக வேண்டும், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள் திட்ட விளக்க உரை ஆற்றினர்.

இதில், வருவாய்த் துறையின் சார்பில் 6 நபர்களுக்கு ரூ.1.80லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா, 38 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை, கூட்டுறவுத் துறையின் மூலம் 11 விவசாயிகளுக்கு ரூ.9.90லட்சம் மதிப்பிலான பயிர் கடன், மகளிர் திட்டத்தின் மூலம் 12 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4.35லட்சம் மதிப்பிலான கடனுதவி, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ரூ,4.07லட்சம் மதிப்பில் 7 நபர்களுக்கு மின்மோட்டார்கள் என பல்வேறு அரசு துறைகளின் மூலம் 195 நபர்களுக்கு ரூ.2,06,60,931 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ வழங்கினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மகாதேவி ஜெயபால், அட்மா தலைவர் ஜெகதீசன், ஊராட்சித் தலைவர் பூங்கோதை, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் துரைராஜ் உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 02:49:59
Privacy-Data & cookie usage: