பெரம்பலூர் நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை!

schedule
2020-02-11 | 16:54h
update
2020-02-11 | 16:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

College student drowns in Perambalur swimming pool; Police are investigating!

Advertisement

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் எட்டாவது வார்டில் நியூ காலனி பகுதியில் அரசு மருத்துவர் திருமால் என்பவருக்கு சொந்தமான நீச்சல் குளம் உள்ளது. அதில் குளிப்பதற்காக சென்ற அந்தமான் நிக்கோபார் தீவைச் சேர்ந்த பாஸ்கர்ராவ் என்பவரது மகன் ஸ்வரன் (19), என்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பெரம்பலூர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், நண்பர் ஜோஷி ஜான் என்பவருடன் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார்,உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 00:24:28
Privacy-Data & cookie usage: