பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு நாமக்கல்லில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

schedule
2018-10-21 | 20:08h
update
2026-04-05 | 02:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Commemoration day for the police who died during the work

நாமக்கல்: பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றது.

1959 ஆம் ஆண்டு, அக்டோபர் 21 ஆம் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படை போலீசார் உயிரிழந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்தில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் நாள், ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகின்றது.

Advertisement

இதையொட்டி நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு போலீஸ் எஸ்.பி அருளரசு தலைமை வகித்து காவல்துறையின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த உயர் அலுவலர்கள், இந்தியா முழுவதும் பணியின் போது இந்த ஆண்டு வீரமரணம் அடைந்த 414 போலீசாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுதூணிற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த 42 போலீசார் வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கி குண்டுகளால் சுட்டு வீர வணக்கம் செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டனர். வீரமரணமடைந்த போலீசார் குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு எஸ்.பி அருளரசு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் செந்தில், சுஜாதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஊர்க்காவல்படை ஏரியா கமாண்டர் தில்லைக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2026 - 02:07:37
Privacy-Data & cookie usage: