மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட 7வது மாநாடு : பேரணி

schedule
2017-12-08 | 14:35h
update
2026-06-05 | 04:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Communist Party of Perambalur Ariyalur District 7th Conference: The rally

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட 7வது மாநாடு இன்று பெரம்பலூரில் தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே பேரணியுடன் தொடங்கியது. வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் தலைமை வகித்தார்.

Advertisement

மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் முன்னிலை வகித்தார். பேரணியை வட்டக்குழு பி.முத்துசாமி தொடங்கி வைத்தார். வானவேடிக்கையுடன் தொடங்கிய பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காமராஜ் வளைவு மற்றும் சங்குபேட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் வரைசென்ற பேரணி நிறைவடைந்தது. பின்னர், புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, ஆர்.அழகர்சாமி, பி.ரமேஷ், எ.கலையரசி, எம்.இளங்கோவன், பி.துரைசாமி, கே.மகாராஜன், ஆர்.சிற்றம்பலம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.கருணாநிதி நன்றி கூறினார்.

நாளை பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள ஜே.கே..திருமண மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் மத்திய கமிட்டி உறுப்பினர் கே.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் எ.லாசர் முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று பெரம்பலூர் அரியலூர் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்பட உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 04:45:01
Privacy-Data & cookie usage: