வேப்பந்தட்டையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: பெரம்பலூர் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்!

schedule
2021-09-21 | 10:05h
update
2021-09-21 | 10:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Community baby shower Cermony for pregnant women in Veppandattai: Perambalur MLA, started!

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் சமுதாய
வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் பங்கேற்று 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரையாற்றினார். வாலிகண்டபுரம் வட்டார மருத்துவ அலுவலர் பிரேம்குமார்,பெரம்பலூர் ஒன்றிய குழு தலைவர் மீனா அண்ணாதுரை, வேப்பந்தட்டை ஒன்றிய குழு துணை தலைவர் எம்.ரெங்கராஜ், வேப்பந்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி கலியமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். இறுதியில் வேப்பந்தட்டை குழந்தை வளர்ச்சி வளர்ச்சி திட்ட அலுவலர் அருணா நன்றி கூறினார்.
தொடர்ந்து, ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. விழாவில், கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கையேடுகள் மற்றும் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 19:23:10
Privacy-Data & cookie usage: