பெரம்பலூர் மற்றும் குன்னம் பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா! 250 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

schedule
2021-09-18 | 13:52h
update
2021-09-18 | 13:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Community Baby Shower in Perambalur and Kunnam! 250 pregnant women attended.

பெரம்பலூர் மற்றும் குன்னத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில், இன்று நடைபெற்றது. அமைச்சர் சிவங்கர் கலந்துகொண்டு, 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கான வளைகாப்பு விழாவை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திரு.சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் (பொ) புவனேஸ்வரி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.சா.செந்தில்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், குன்னம் ஊராட்சி மன்றத் தலைவர் தனலெட்சுமி மதியழகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ. கருணாநிதி, சோ. மதியழகன், மகாதேவி ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினர் (குன்னம்) உமா சந்தோஷ்குமார், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பிரேமஜெயம், க. பூமா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 07:11:53
Privacy-Data & cookie usage: