சமுதாய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு விருது

schedule
2017-12-07 | 00:45h
update
2026-07-04 | 10:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Community Reconciliation, Award for People who Encourage National Integration

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் விடுத்துள்ள தகவல் :

நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது.
அதன்படி 2016-2017-ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

மேற்காணும், விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான http://www.sdat.tn.gov.in> மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2016-2017-ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர்- செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேருபூங்கா, சென்னை – 600 084 என்ற முகவரிக்கு, வருகின்ற 15.12.2017-க்குள் வந்து சேரும்படி அனுப்பவேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 10:20:50
Privacy-Data & cookie usage: