Community Shower Festival, which was pregnant women in Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டத்தில் 560 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமுக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் ராமநாதபுரம் குமரய்யா கோயில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் போகலுார், ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 560 கர்ப்பணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.

கர்ப்பணிகளுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு செய்த மாவட்ட சமுக நல அலுவுலர் குணசேகரி பேசியதாவது:

தாய் சேய் மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுது்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று சமுதாய வளைகாப்பு ஆகும். ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பணி பெண்களுக்கும் இவ்விழா அரசால் நடத்தப்படுகிறது. அனைவரின் ஆதரவும் கர்ப்பணிகளக்கு இருக்கிறது என்பதை தெிரவிக்கும் வகையிலும் இந்த வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.

ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்பம் மற்றும் பிரசவ காலம் மிக முகந்கியமான காலகட்டமாகும் . கர்ப்பகாலம் என்பது கர்ப்பணிப் பெண்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக்குடியது.

ர்ப்பகாலத்தில் அவள தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், தயார்படுத்தி கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான சுழலில் தன்ைன வைத்து கொள்ளவேண்டும். கர்ப்பணிகளுக்கு நல்லதொரு கர்ப்பகால பராமரிப்பும், கவனிப்பும் கொடுக்கப்பட்டால்தான் ஊட்டசத்து குறைபாடில்லா குழந்தை பெற்று எடுக்க முடியும்.

டாக்டர் முத்துலெட்சுமிரெட்டிமகப்பேறு நிதிஉதவி திட்டத்தின் கீழ் 7வது மாதத்தில் ரு.4 ஆயிரமும், பிரசவத்தின் போது இரண்டாவது தவணையாக ரு.4 ஆயிரமும், குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி போட்டதும் முன்றாம் தவணையாக ரு.4 ஆயிரமும் மொத்தம் ரு.12 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது, என பேசினார்.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கவுசல்யா நன்றி கூறினார்.

– ராமநாதபுரம், சிவசங்கரன்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!