மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக  பணிபுரிந்தவர்கள், நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-06-29 | 15:38h
update
2022-06-29 | 15:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Companies that have worked hard for the benefit of the disabled can apply for awards; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதுகள் பெற விருப்பமுள்ள மற்றும் தகுதியானவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்பளித்த தனியார் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி போன்ற பிரிவுகள் வாரியாக விண்ணப்பிக்கலாம்.

Advertisement

விருதுக்கு தகுதியானவர்கள்பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 05.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 225474 என்ற தொலைபேசி எண் வாயிலாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 11:33:26
Privacy-Data & cookie usage: