விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி : நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு

schedule
2018-11-28 | 05:50h
update
2026-04-22 | 01:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Government bus Confiscation, that did not pay compensation to the deceased’s family : Namakkal court orders

நாமக்கல் அருகே விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.

Advertisement

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஒருவந்தூர்புதூரை சேர்ந்தவர் செல்வராஜ் (36). எலக்ட்ரீசியன்.இவர் கடந்த 2015 பிப்ரவரி 1ம் தேதி, பைக்கில் நாமக்கல்லில் இருந்து மோகனூர் சென்ற கொண்டிருந்த போது அரசு பஸ் மோதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சார்பில் வழக்கீல் ராஜா, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், செல்வராஜின் குடும்பத்திற்கு சேலம் அரசு போக்குவரத்து கழகம் ரூ.8.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.இதையடுத்து செல்வராஜ் குடும்பத்தினர், நிறைவேற்று மனுவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோ, சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சியில் இருந்து நாமக்கல் பஸ்ஸ்டாண்டிற்கு வந்த அரசு பஸ்சை கோர்ட் அமினாக்கள் ஜப்தி செய்தனர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்தில் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 01:14:49
Privacy-Data & cookie usage: