பெரம்பலூரில், இலங்கை அகதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுமான பணிகள்; கலெக்டர் ஆய்வு!

schedule
2023-12-25 | 15:48h
update
2023-12-25 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Construction of housing for Sri Lankan refugees in Perambalur; Collector review!

பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் பகுதியில் ரூ.3.60 கோடி மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கான நவீன வசதிகளுடனான 72 குடியிருப்புகள் கட்டும் பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

இலங்கையிலிருந்து கடல் கடந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு, பாதுகாப்பான, கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தரப்படும் என 27.08.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் 1 தொகுப்பிற்கு 4 வீடுகள் வீதம் 72 வீடுகள் 18 தொகுப்புகளாக புதிதாக கட்டுவதற்கான பணிகள் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரால் 18.11.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி கட்டுமான பணிகள் முறையாக நடைபெறுகிறதா என பார்வையிட்ட கலெக்டர் கற்பகம், கட்டுமான கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மழைக்காலமாக இருப்பதால் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பணிகளை விரைந்து முடித்து கொடுக்க வேண்டுமெனவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அரசு பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.07.2026 - 19:45:24
Privacy-Data & cookie usage: