விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விநாயகர் சிலை அமைப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!

schedule
2020-08-17 | 19:06h
update
2020-08-17 | 19:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Consultation meeting with statue organizers on behalf of Perambalur District Police regarding Ganesha Chaturthi!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் டி.எஸ்.பி கென்னடி, மங்களமேடு டி.எஸ்.பி தேவராஜ் தலைமையிலும் இன்று விநாயக சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விநாயகர் சிலை வைத்து கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. ஆகையால் விநாயகர் சிலை வைத்து கொண்டாட விரும்பும் நபர்கள் தங்களது வீட்டில் ஒரு அடிக்கு மிகாமல் உயரமுள்ள சிலைகள் வைத்து கொண்டாடலாம் என்றும், விநாயகர் சிலை தொடர்பாக பொது இடங்களில் கூட்டம் கூட கூடாது, சிலை வைத்து வழிபடுபவர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிய வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் சிலை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 03:33:02
Privacy-Data & cookie usage: