பெரம்பலூர் அருகே சில்லக்குடி கிராமத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்!

schedule
2022-08-20 | 13:57h
update
2022-08-20 | 13:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Consumer awareness meeting in Chillakudi village near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சில்லக்குடி கிராமத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம், ஊராட்சித் தலைவர் ரேகா தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தின் முன்னாள் பொறுப்பு நீதிபதி அன்பழகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

Advertisement

வழக்கறிஞர் சங்கர் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றியும் நுகர்வோர்கள் தனக்கு பாதிப்பு அடையும் பொழுது எவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவரும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எஸ் கே கதிரவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில் பணம் செலுத்தி பொருளையோ அல்லது சேவை பெறக்கூடிய ஒவ்வொருவரும் நுகர்வோர் தான் என்றும் அந்த வகையில் நாம் அனைவரும் நுகர்வோர் தான் எனவே பொருட்களை வாங்கும்போது மிகவும் விழிப்புடனும் கவனத்துடனும் வாங்க வேண்டும் என்றும் அரசால் எதையும் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை கவனித்து வாங்க வேண்டும் என்றும் போலியான விளம்பரங்களை நம்பி தரமற்ற பொருட்களை வாங்க கூடாது என்றும், பாதிப்படைந்த நுகர்வோரின் நீதிமன்றத்தை அணுகும் பொழுது எவ்வாறு தீர்வுகளையும் பெறலாம் என்பது குறித்தும், பொருட்கள் வாங்கும் போது அதன் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும் என்றும் அவசியமாக பில் வாங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஊராட்சித் துணை தலைவர் தங்கப்பன் முன்னிலை வகித்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ரேவதி நன்றி கூறினார். மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.05.2026 - 17:57:32
Privacy-Data & cookie usage: