பெரம்பலூர் அருகே, தெருக்குழாயில் கலங்கலாக மாசுடன் வந்த குடிநீர்: சாலை மறியில் செய்த பொதுமக்கள்!

schedule
2022-09-17 | 15:53h
update
2022-09-17 | 15:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Contaminated drinking water came from the street pipe near Perambalur: the public blocked the road!

பெரம்பலூர் மாவட்டம், நுத்தப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் இருந்து, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தெருக்குழாயில் வந்த குடிநீர் கலங்கலாக மாசு ஏற்பட்ட நிலையில் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக இதேபோன்று தொடர்ந்து வந்ததால் ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் இன்று காலை, திடீரென பொதுமக்கள் நூத்தப்பூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கை.களத்தூரிலிருந்து நூத்தப்பூர் வழியாக பெரம்பலூர் செல்வதற்கு வந்த அரசு பஸ் மற்றும் லாரி ஒன்றை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கை.களத்தூர் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விரைவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 21:11:14
Privacy-Data & cookie usage: