நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி மூலம் உதவி ஜெயிலர் பதவிக்கு போட்டித்தேர்வு: 183 பேர் ஆப்சென்ட்

schedule
2019-01-06 | 16:03h
update
2019-01-06 | 16:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Contest to the Sub-Jailer’s by TNPSC in Namakkal: 183 persons are absent

நாமக்கல்லில் நடைபெற்ற உதவி ஜெயிலருக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வில் 400க்கு 183 பேர் கலந்துகொள்ளவில்லை.

Advertisement

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டிஎன்பிஎஸ்சி) மூலம் சிறைத்துறையில் காலியாக உள்ள உதவி ஜெயிலர் பதவிக்கான போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுது 220 பேருக்கும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுது 180 பேருக்கும் ஹால் டிக்கட் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் 220 பேருக்கு 118 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். அரசு மகளில் மேல்நிலைப்பள்ளியில் 180 பேருக்கு 99 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். மொத்தம் 400 பேரில் 183 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினர் பாலுசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகளில் ஆய்வில் கலந்துகொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 10:10:12
Privacy-Data & cookie usage: