பெரம்பலூர் கிளைச் சிறையில் சமையலர் பணி

schedule
2017-07-05 | 15:51h
update
2026-05-01 | 23:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cookery work at Perambalur branch jail

பெரம்பலூர் கிளைச் சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சிறைத்துறையின் கீழ் இயங்கும் திருச்சி, மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் கிளைச் சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்படி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் பணியில் இரண்டு வருடம் அனுபவம் பெற்று 01.07.2016 அன்று 18 வயதுக்கு மேற்பட்டவராக (பொதுபிரிவினருக்கு 30 வயது, எம்.பி.சி – டி.என்.சி-ல் 33 வயது, எஸ்.சி – எஸ்.டி-ல் 35 வயதுக்குட்பட்டவராக) இருக்கவேண்டும்.

இப்பதவிக்கு ஊதிய விகிதம் 4,800-10,000 + தர ஊதியம் 1400ல், இனசுழற்சியின் அடிப்படையில் பொதுப்போட்டி, பொது, முன்னுரிமை அற்றவர், மற்ற வகையினர் ( GT-GL-NP-மற்றவை-1-ன் கீழ்) தெரிவு செய்து நியமனம் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை 20.07.2017-க்குள் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 23:38:33
Privacy-Data & cookie usage: