ரூ.12 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரண உதவி; பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்.

schedule
2020-05-11 | 05:15h
update
2020-05-11 | 05:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona relief assistance worth Rs 12 lakh; R.T. Ramachandran MLA Presented on behalf of Perambalur district AIADMK.

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.இராமச்சந்திரன் வழங்கினார்.

Advertisement

பெரம்பலூர் வனொலித் திடலில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 106 நபர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தை சேர்ந்த 102 குடும்பத்தினர்களுக்கும், தலா ரூ.ரொக்கம் ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி, மளிகைப் பொருட்களின் தொகுப்புகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கும், தலா ரூ.500 ரொக்கமும், 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்களும், என மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அந்தந்த ஒன்றியச் செயலாளர்களிடம் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பெரம்பலூர் நகரச் செயலாளர் ஆர்.ராஜபூபதி, ஒன்றியச் செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, செல்வக்குமார், மாவட்ட தொழில் நுட்ப அணிச் செயலாளர் ஜி.பெருமாள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 04:22:35
Privacy-Data & cookie usage: