கொரோனா: வேலை கிடைக்காததால் தொழிலாளி குடும்பத்தில் தகராறு: எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் மரணம்!

schedule
2020-10-20 | 16:58h
update
2020-10-20 | 16:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona: Worker’s family quarrel over unavailability of job: Woman dies after eating Rat Poison

பெரம்பலூர் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்து (வயது 55). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 50), இவர்களுக்கு ராஜசேகர் (32), ரமேஷ் (29) என இரு மகன்கள் உள்ளனர், அவர்களுக்கும் திருமணமாகி ஆகிவிட்டது. தச்சு வேலை கிடைக்காததால் தொடர்ந்து 4 நாட்களாக செல்லமுத்து வீட்டில் இருந்துள்ளார். இதை பார்த்த செல்லமுத்துவின் மனைவி பரமேஸ்வரி கடந்த அக்.14ம் தேதி காலை 9 மணிக்கு சத்தம் போட்டுள்ளார். பதிலுக்கு செல்லமுத்துவும் வேலை கிடைத்தால் தானே போக முடியும் என தெரிவித்துள்ளார். இதில் மனமுடைந்த பரமேஸ்வரி சிறிது நேரம் கழித்து எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்ட பரமேஸவரி மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் போது உயிரிழந்தார். இது குறித்து செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 03:04:00
Privacy-Data & cookie usage: