Prevent Coronavirus : Government cancels programs; Perambalur Collector v. Santha’s order.

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள உத்தரவு:

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் மார்ச். 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே கைகழுவுதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தடுப்பு விழிப்புணா;வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் ஆட்சியரகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாதாந்திதர வேளாண் குறைதீர்க்கும் கூட்டம், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் போன்ற குறைதீர்க்கும் கூட்டங்கள் மற்றும் 19.03.2020 அன்று நடைபெற இருந்த அரசுப் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 21.03.2020 அன்று ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் நடைபெற இருந்த தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம், உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் 31.03.2020 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் சமூக நலனில் அக்கறை கொண்டு மக்கள் அனைவரும் கூடும் கோவில் திருவிழாக்கள், சமுதாய நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு செல்வதை தவிர்த்து அரசின் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!