கொரோனா வைரஸ் : பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததால் மீண்டும் ஆரஞ்சு மண்டலத்திற்கு திரும்பும் பெரம்பலூர் மாவட்டம் !

schedule
2020-05-23 | 18:18h
update
2020-05-23 | 18:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Coronavirus: Perambalur district returns to Orange zone as victims recover

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டிருந்த 139 பேரில், ஏற்கனவே 127 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

Advertisement

டிச்சார்ஜ் செய்யப்பட்டவர்களுக்கு துணை இயக்குனர் முன்னிலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் பழ கூடைகள் மற்றும் சத்து மாத்திரகள் கொடுத்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கி, கரவொலி எழுப்பி வாகனங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 139 பேரில் இதுவரை 132 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், இன்னும் 5 தாய்மார்கள் உள்பட 7 பேர் மட்டுமே கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆரஞ்சு மண்டத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் சிகப்பு மண்டத்திற்கு மாறிய நிலையில் தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் மீண்டும் ஆரஞ்சு மண்டலத்திற்கு திரும்பி வருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 05:03:24
Privacy-Data & cookie usage: