எஸ்.சி எஸ்டி. மாணாக்கர்களுக்கு அழகு சாதனவியல், சிகை அலங்கார பயிற்சி: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2023-02-16 | 10:32h
update
2023-02-16 | 10:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cosmetology, Hairdressing Training For S.C., S.T, Students: Perambalur Collector Info!

தாட்கோ மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் (Maha Family Salon and Spa International Training Academy) மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகுசாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & Hari Dressing) பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

Advertisement

இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிபடிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development of India)-ஆல் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியினைபெற்றவர்கள் தனியார் அழகுநிலையங்களில் (Gayathri Hair& Skin Salon, RKS Beauty Parlour, Naturals and body craft) பணிபுரிய 100% வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினைவெற்றிகரமாகமுடிக்கும் மாணாக்கர்களுக்கு ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம் மற்றும் சுய வேலைவாய்ப்புதிட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 இலட்சம் மானியத்துடன் கூடியரூ.10.00 இலட்சம் கடன் உதவி வழங்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:19:38
Privacy-Data & cookie usage: