4857 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.

schedule
2020-02-01 | 16:20h
update
2020-02-01 | 16:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Costless bicycles to school students in 4857: Perambalur MLA inaugurated

மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

பதினோராம் வகுப்பு பயிலும் 4857 மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 88,257 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை டி.ஆர்.ஓ ராஜேந்திரன் பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர்

பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவ மாணவிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். குறிப்பாக விலையில்லா பாடநூல், நோட்டு புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை, புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, உள்ளிட்ட 14 வகையான திட்டங்களை பள்ளிக் கல்வித்துறையின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தினார். அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டமாகும்.

கிராமத்து மாணவ-மாணவிகள் தொலைதூரம் நடந்தே சென்று கல்வி கற்கும் நிலையினை மாற்றி அவர்களுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கி வருகின்றது. தமிழக அரசு. நமது பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும், கல்வித்துறைக்கு என்று எண்ணற்ற சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கின்றது. வேப்பந்தட்டையில் இருபாலருக்கான புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி, வேப்பூரில் பெண்களுக்கான கலை அறிவியல் கல்லூரி, மாவட்ட அளவிலான மற்றும் ஒன்றிய அளவிலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாது தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுப்பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களையும், புதிய அரசுப் பள்ளிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கியிருக்கிறார்கள். மேலும், சிறப்பு வாய்ந்த மாதிரிப் பள்ளி அமையவும் தற்போது நடைபெறும் அம்மாவின் ஆட்சியின் நடவடிக்கையே காரணமாகும். மேலும் அரசின் இதுபோன்ற திட்டங்களை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், என பேசினார்.

முன்னதாக பத்தாம் வகுப்பு , பனிரெண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 15 இடங்களை பெறும் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்படும் காமராஜர் விருது மற்றும் தலா ரூ.10,000 க்கான காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சி.இ.ஓ மதிவாணன், டி.இஓ மாரிமீனாள், குழந்தைராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 23:17:56
Privacy-Data & cookie usage: