மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் தையல் இயந்திரங்கள் : பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2020-12-12 | 12:39h
update
2020-12-12 | 12:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Costless petrol scooters and sewing machines for the disabled: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசின், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு நல்ல நிலையில கைகள்; உள்ள மாற்றுத்திறனாளிக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. 18 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் வரும் டிச.21 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுநாள் வரை அரசு துறைகளில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெறாதவராக இருக்கவேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், காதுகேளாத மற்றும் வாய்பேசாதோர்கள் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற 18 வயதுமுதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் டிச. 18.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றிருக்கவேண்டும். இதுநாள் வரை அரசு துறைகளில் தையல் இயந்திரம் பெறாதவராக இருக்கவேண்டும்.

எனவே, தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்விசான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர். என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 21:39:47
Privacy-Data & cookie usage: