பருத்தி காய்ந்து கருகியதால், பெரம்பலூர் அருகே பெண் விவசாயி அதிர்ச்சியில் சாவு

schedule
2017-01-02 | 19:02h
update
2026-06-27 | 17:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

cotton dries, the in Perambalur in shock at the death of the woman farmer வறட்சியால் பருத்தி காய்ந்து கருகியதால் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் விவசாயி அதிர்ச்சியில் சாவு

பெரம்பலூர் மாவட்டம், சு.ஆடுதுறை கிராமத்தை சேர்ந்த சு. ஆடுதுறை கிராமத்தை சேர்ந்த செம்மலை மனைவி விசாலாட்சி (62). இவர்கள் விவசாயம் செய்து வருகிறார். கடலூர் மாவட்டம், திட்டகுடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தில் அவருக்கு சொந்தமான வயலில பருத்தி சாகுபடி செய்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், தற்போது பருவ மழை குறைவாக பெய்ததால், வயல்களில் பயிரிட்டுள்ள பருத்தி செடிகள் காய்ந்து கருகத் துவங்கி உள்ளது. இதை கண்ட விசாலாட்சி மனம் வெம்பி அழுதுள்ளார். பருத்தியால் ஏற்பட்டுள்ள நட்டத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற அதிர்ச்சியில் ஏற்பட்ட நெஞ்சுவலியால் வயலிலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே பரிதாமாக இறந்தார்.

வெகு நேரம் ஆகியும் விசாலாட்சி வீடு திரும்பாததால், தேடி அவரது கணவர் செம்மலை மற்றும் உறவினர்கள் வயலுக்கு சென்று தேடிபார்த்துள்னர். அப்போது வயலில் விசாலாட்சி பிணமாக கிடந்துள்ளார். விசாட்சியின் உடலை, சு.ஆடுதுறைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் இறந்து போன விசாலாட்சியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலில் பருத்தி காய்ந்ததால் பெண் விவசாயி ஒருவர் இறந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 17:34:04
Privacy-Data & cookie usage: