பெரம்பலூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தூக்கு போட்டு சாவு!

schedule
2019-11-04 | 06:40h
update
2019-11-04 | 07:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Could not bear the sorrow at the death of the husband and wife dead hanged near in Perambalur!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம், அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிசேகரன் (வயது 50), நேஷ்சனல் பர்மிட் லாரி ஓட்டுனராக பணி செய்து வந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலமின்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இவரது மனைவி செல்லம் (46), செல்லத்திற்கும் உடல் நிலை சுமார் கடந்த ஓராண்டாக சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த அவர் இன்று வீட்டில் இறந்து விட்டார். இதை கண்ட மணிசேகரன் துக்கம் தாங்கமுடியாமல் தூக்குமாட்டி இறந்து விட்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிய வந்தது, உடனடியாக அவர்களது இரு உடல்களையும் மீட்டனர். கணவன் மனைவி இருவரும் இறந்த சம்பவம் எசனை கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இறந்து போன மணிசேகரன் – செல்லம் தம்பதியினருக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 10:53:32
Privacy-Data & cookie usage: