ஆசிரியர்கள் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு விவரம்

schedule
2017-05-19 | 09:46h
update
2026-09-10 | 17:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

Advertisement

இக்கலந்தாய்வில் நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் செல்வகுமார் அரசு மேல்நிலைப்பள்ளி அனுக்கூருக்கும், காரை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ந.சுசீலா அரசு மேல்நிலைப்பள்ளி வேப்பந்தட்டைக்கும்.

கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.பிரபாகரன் அரசு மேல்நிலைப்பள்ளி காரைக்கும், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் எம்.மகாலெட்சுமி இலப்பைக்குடிக்காடு (பெ) மேல்நிலைப்பள்ளிக்கும்,

பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி கவுள்பாளையத்திற்கும், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் மூலம் துங்கபும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லமுத்து திருச்சி மாவட்டம் சிறுகான்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.09.2026 - 17:51:31
Privacy-Data & cookie usage: