அதிமுக பொதுக்குழு குறித்த, நீதிமன்ற தீர்ப்பு : பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

schedule
2022-09-02 | 09:07h
update
2022-09-02 | 09:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Court verdict on AIADMK general committee: AIADMK members burst firecrackers to celebrate in Perambalur district!

ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை, எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீடு செய்திருந்தார். கடந்த 25 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில், ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து அதிமுக பொதுக்குழு செல்லும் என எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

Advertisement

இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன், தலைமையில் அதிமுகவினர் கொளக்காநத்தம் கிராமத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதே மாவட்ட தலைநகரான பெரம்பலூரிலும், அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 17:02:35
Privacy-Data & cookie usage: