பெரம்பலூர் அரியலூர் மாவட்ட சிபிஎம் இடைக்கமிட்டி செயலாளர்கள் மற்றும் செயற்குழு கூட்டம்.

schedule
2017-07-19 | 14:34h
update
2026-05-01 | 13:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

CPM Intermediate Secretaries and Executive Meeting at Perambalur Ariyalur District.

பெரம்பலூர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட இடைக்கமிட்டி செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பயிற்சி வகுப்பு துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

Advertisement

மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன் தலைமை வகித்தார். மாநிலக்குழு எம்.சின்னதுரை மற்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் ஆகியோர் பயிற்சி வகுப்பு நடத்தின.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி சம்பந்தமாக சிறுதொழில் நடத்துவோர் மற்றும் வர்த்தகர்களுடன் இணைந்து இயக்கம் நடத்துவது, மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிட பொதுமக்கள் ஆதரவுடன் வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.அழகர்சாமி, என்.செல்லதுரை, எ.கலையரசி, பி.ரமேஷ், எம்.இளங்கோவன், பி.துரைசாமி, ஆர்.சிற்றம்பலம் உள்பட ஆண்டிமடம், டி.பழூர், செந்துறை, திருமானூர், அரியலூர்,குன்னம் ஆகிய பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 13:48:55
Privacy-Data & cookie usage: