பி.சி, எம்.பி.சி மற்றும் சீர்மரபின மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திட கடனுதவி: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-08-05 | 23:40h
update
2026-06-12 | 11:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Credit to improve the livelihood of BC, MBC and DNC Community people: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திட பொது கால கடன், தனிநபர் கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சிறுகடன், கறவை மாட்டுக் கடன் போன்ற பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுயஉதவி குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பொதுகால கடன் திட்டம் மூலம் சிறுதொழில், வியாபாரம் செய்ய அதிகபட்சமாக தனி நபர் கடன் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 முதல் 8 வரை வசூலிக்கப்படுகிறது.

பெண்களுக்காக புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதமாகும். கறவை மாடுகள் வாங்க ஒரு மாட்டிற்கு ரூ.30ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதமாகும்.

கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளில் சமர்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 11:53:43
Privacy-Data & cookie usage: