Crew attack on crops: demonstrated at the Perambalur Collectorate office with farmers
படைப்புழு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் உட்கார்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் முதன்மையான மாநிலமாக திறந்து வருகிறது. தற்போது விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவு மானாவாரி பயிரான மக்காச்சோளத்தை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர் இதேபோன்று வெங்காயம் பருத்தியும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவமழை மற்றும் தட்பவெப்பநிலையால் பயிர்களில் படைப்புழு அதிக அளவில் தாக்கி அழித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு பூச்சி மருந்துகளை தெளித்தும் கட்டுப்படவில்லை, வேளாண் அதிகாரிகள் முயற்சித்தும் வெற்றி பெறவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்த அவர்கள் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான பயிர்களுடன் வந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்காச்சோளம் ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும் கரும்பு ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாயும் வெங்காயம் ஏக்கர் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும் மேலும் தமிழக அரசு இந்த இழப்பீட்டு நிதி மத்திய அரசின் பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது குறைதீர் கூட்டத்திற்கு சென்ற விவசாயிகள் அங்கிருந்த வருவாய் மற்றும் வேளாண் அதிகாரிகளிடம் படை தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோளம் கரும்பு வெங்காயம் போன்றவற்றை எடுத்துச் சென்று காண்பித்தனர். இதுகுறித்து உரிய கணக்கெடுத்து அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல் உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதற்கு அதிகாரிகள், அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்தனர்.