பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகள் ஜன.30 க்குள் தகவல்களை அளிக்க அதிகாரி தகவல்

schedule
2017-01-26 | 13:43h
update
2026-09-16 | 17:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Crop insurance to farmers to provide information within Jan.30 official information

பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :

வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் ஏற்பட்டுள்ள பயிர்சேதங்களை ஈடு செய்யும் வகையில் அனைத்து பயிர்களுக்கும் பயிர்க் காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து விவசாயிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகளும் தங்கள் விளைநிலத்தில் உள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர்.

Advertisement

காப்பீடு நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கிராம நிர்வாக அலுவலர்களால் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறாக விவசாயி மற்றும் அவர்களது பயிர்கள் குறித்தும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்துமான கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று (25.01.2017) மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சிப் பணியாளர், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்க பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும், தங்களது நிலம் குறித்த தகவல்களையும், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குப்புத்தக நகல் ஆகியவற்றை 30.01.2017-க்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணையும் இத்துடன் இணைத்து அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 17:16:35
Privacy-Data & cookie usage: