பெரம்பலூர் அருகே விவசாயிகள் மழைவேண்டி கிடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு பூஜை!!

schedule
2018-09-04 | 16:15h
update
2018-09-04 | 16:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cut the goat with rice farmers pray for rain near Perambalur special prayers !!

பெரம்பலூர் அருகே உள்ள விசுவகுடியில் விவசாயிகள் மழைவேண்டி பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டார பகுதியில் கடந்த சில வருடங்களாகவே போதிய மழை பெய்யவில்லை. இதனால் விவசாயம் பாதித்ததுடன் தற்போது குடிநீர்
தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் மானாவாரி நிலத்தில் விதைப்புக்காக இந்த பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களை உழுது உரமிட்டு வைத்துவிட்டு மழைக்காக காத்திருக்கின்றனர்.

ஆவணி மாதம் 20 ந் தேதி ஆகியும் இன்னும் இந்த பகுதியில் மழையே பெய்யவில்லை. அருகிலுள்ள மாவட்டங்களில் பெய்யும் மழைக்கூட இந்தபகுதியில் பெய்யவில்லை.

இதனால் வேதனையடைந்த வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், இந்த பகுதி மழைக்கடவுளாக கருதப்படும் விசுவகுடி அணைக்கட்டு அருகே உள்ள கொடிசுத்தி கருப்பு சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி, சிறப்பு பூஜை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு விசுவகுடி கொடிசுத்தி கருப்பு சுவாமி கோவிலில் பொங்கல் வைத்தும், கிடா பலியிட்டும் மழைபெய்ய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து சாமி கும்பிட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமிக் கும்பிட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2026 - 20:07:00
Privacy-Data & cookie usage: