Dato ‘PRAKADEESH KUMAR, a Multinational Businessman, Opened a Government Direct Paddy Procurement center in Poolambadi.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி, கடம்பூர், கள்ளபட்டி, அரும்பாவூர், அ.மேட்டூர், பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடிசெய்யப்பட்டு வருகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரபளவில் நெல்சாகுபடி செய்யப்பட்டும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உரிய விலை கிடைக்காமல் விற்பதால் போதிய வருமானம் இல்லாமல் சிரமம் அடைந்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து பூலாம்பாடி பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து ஊருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட, பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமாரை ( DATO. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies) சந்தித்து நெல் கொள்முதல் நிலையம் வந்தால்தான் நெல்லுக்கு உரியவிலை கிடைக்கும் என தெரிவித்தனர்.

விவசாயிகளின் சிரமத்தை அறிந்த தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமாரை அரசு அதிகாரிகளிடம் பேசி, முயற்சித்து பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி பூலாம்பாடி அரும்பாவூர் சாலையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

நெல்மூட்டைகள் வரத்து அதிகரித்து வருவதால், கொள்முதல் செய்வதில் சிறிது தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மீண்டும் டத்தோ பிரகதீஸ்குமாரை சந்தித்து மேலும் ஒரு நெல்கொள்முதல் நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும், அப்படி செய்தால், விவசாயிகள் சிரமம் குறைந்து, நல்ல பயனடைவார்கள் என கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையின் படி அரசு அதிகாரிகளிடம் பேசி மேலும் ஒரு நெல்கொள்முதல் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று காலை பூலாம்பாடி – வேப்படி-பாலக்காடு சாலையில் நடைபெற்றது.

தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நேரடி நெல்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தாமதமின்றி உரிய முறையில் கொள்முதல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

திறப்பு விழாவில் தொழிலதிபர் சூரியபிரகாசம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் சுந்தர்ராஜ், பூலாம்பாடியை சேர்ந்த நாட்டார் முக்கிய பிரமுகர்கள். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நெல் கொள்முதல் நிலையத்தால், சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேப்படி, பாலக்காடு கிராமங்களை சேர்ந்த விவாசயிகளும், மலைவாழ்க்களும் அதிகளவில் பயன்பெறுவார்கள்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!