Contribution of Rs.13 crore to make hometown shine like foreign cities: People are praising the businessman who is looking for pride in his hometown! – DATO S PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies

தான் பிறந்த ஊரும், மக்களும் சீரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதோடு, வெளிநாடு தன் ஊரும் பிரகாசிக்கவும், பிரபலபாகவும், தொழிலபதிபர் ஒருவர் அரசு திட்டத்திற்கு தனது பங்களிப்பாக சுமார் ரூ. 13 கோடி கொடுப்பதாக தெரிவித்து, இன்று ரூ.90 லட்சத்திற்கான (DD) வரைவோலையை வழங்கினார். பணம் இருந்தாலும், கொடுக்க மனம் வேண்டும். பணத்திற்கு ஏற்ப அவரும் தனது மனதை விசாலப்படுத்தி வைத்திருக்கிறார்.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்தவர் டத்தோ. பிரகதீஸ்குமார். மலேசியாயில் வர்த்தகம் செய்து வருகிறார். மேலும், ஆஸ்திரிலேயே உள்ளிட்ட பல நாடுகளில், தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி உள்ளார். மேலும், பல உள்ளூர் மக்களின் கோரிக்கைகளுக்கு இது வரை பல திட்டங்களை அரசிடம் பெற்று கொண்டுவந்துள்ளார். சில திட்டங்களை தனது சொந்த செலவிலேயே செய்தும் கொடுத்து வருகிறார். அந்த ஊரில் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த திரவுபதி அம்மன் கோவிலையும் கட்டி கொடுத்து குடமுழுக்கு நடத்தினார். இதனால் பொதுமக்களால் கவரப்பட்டார். மேலும், வெளிநாட்டு நகரங்களை போல் பூலாம்பாடியும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு, பூலாம்பாடி பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்பு வசதிபணிகளை மேற்கொள்வதற்காக தொழிலதிபர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார், முதற்கட்ட பங்களிப்பு தொகையாக 90 லட்ச ரூபாய்க்கான டிடி – ஐ, அவரது ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் இன்று வழங்கினார்.

பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தின் கடைக்கோடி மாவட்டங்களின் எல்லைப் பகுதியான பூலாம்பாடி பேரூராட்சி ,பூலாம்பாடி, கடம்பூர், புதூர் அரசடிகாடு, மேலகுணங்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில், 10ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் சாலை வசதி,குடிநீர் வசதி,மின்விளக்கு வசதி,கழிவு நீர் கால்வாய் வசதி,ஆகிய அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் உள்ளது. அதே போல் மலையடிவார பகுதியான அரசடிகாடு பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை வாகனங்களில் ஏற்றிச்செல்ல மிகவும் அவதிபட்டுவருகின்றனர். அடிப்படை வசதி பற்றாக்குறையால் மிகவும் சிரமத்தை சந்தித்து வந்த பொதுமக்கள், பூலாம்பாடி பேருராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தருமாறு பன்னாட்டு தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.அதன்படி பொதுமக்களின் சிரமங்களை கேட்டறிந்த அவர், பொதுமக்கள் பங்களிப்பு தொகையுடன் நமக்குநாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்தார். அதற்கான முயற்சிகளை முழுவீச்சில் ஏற்பாடு செய்த டத்தோ எஸ். பிரகதீஸ்குமார் அரசு அதிகாரிகளிடம் கூறி பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறியசொல்லி அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தார். இதனை செய்து முடித்தால் பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறும் என்பதால் , அடிப்படை வசதிகளை நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டது.டத்தோ S பிரகதீஸ்குமார் அவர்கள் அவரது சார்பில் ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் 13 கோடிரூபாய் பங்களிப்பு தொகையாக தரப்படஉள்ளது.

இதன் மூலாம் பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி,குடிநீர் வசதி,மின்விளக்குவசதி,கழிவுநீர் கால்வாய்,உயர்மட்ட பாலம் அமைத்தல்,குடிநீர் கிணறு அமைத்தல் பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் பங்களிப்பு தொகையாக அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் 90 லட்ச ரூபாய்க்கான டிடியை பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் க்கியலட்சுமிசெங்குட்டுவன்,கவுன்சிலர்கள் பூங்கொடிமணி, கலைச்செல்வி பாலகிருஷ்ணண், தேவிகா அருண், மஞ்சுளா ரவி, கண்ணகி கருப்பையா, செல்வராணி ராமர், ராஜலட்சுமி செல்வக்குமார், பர்கத்நிஷா, மாணிக்கம், ராமதாஸ், சுதாகர், ஜெயந்தி பெருமாள் , கஸ்தூரி வீராசாமி, மலேசிய நாட்டு துணை தூதர் சரவணண், மற்றும் பூலாம்பாடி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், தொழிலதிபர் பிரகதீஸ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

நான் அரசியல்வாதி அல்ல. நான் பிறந்த இந்த ஊரும் சீரும் சிறப்பாக இருக்க என்னால் ஆன அனைத்து உதவிகளையும் மனதார செய்ய தயாராக உள்ளேன். இது போன்ற உதவிகள் செய்வதற்கு அரசும், அதிகாரிகளும், பொதுமக்களும், ஒத்துழைப்பு கொடுத்தால் போது மானது. தமிழ்நாட்டிலேயே இந்த ஊரை சிறந்த முன் உதாரணமாக்க நினைக்கிறேன் என தெரிவித்தார்.

சொந்த பணத்தை ஊருக்காக வாரி வழங்கும் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமாருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்கட்சியினர் சார்பில் பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவரை ஒவ்வொரு வளர்ந்த தொழிவதிபரும் சொந்த ஊரை தத்து எடுத்துக் கொண்டால் அந்த ஊர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

 


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!