பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து  மகள் பலி! தந்தையும் தற்கொலை!

schedule
2020-02-13 | 15:42h
update
2020-02-13 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Daughter falls into well near Perambalur Dad’s father d Liies!

பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி-செல்லக்கண்ணு தம்பதியரின் மகள் மகாலட்சுமி(16), என்பவர் அதே ஊரில் உள்ள ராமர் என்பவரது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டார்.

Advertisement

சடலத்தை தீயணைப்பு துறையினர் 30 அடி ஆழத்தில் இருந்து மீட்டனர்.

டுட்டோரியல் காலேஜ் ஒன்றில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்காக டியூசன் படித்து வந்த மகாலட்சுமி, சரிவர படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்து தந்தை பொன்னுசாமி அடிக்க துரத்தும் போது, மகாலட்சுமி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தன்னால்தான் மகள் கிணற்றில் தவறி விழுந்து விட்டார் என நினைத்த பொன்னுசாமி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 00:34:33
Privacy-Data & cookie usage: