Day after Tomorrow, private sector employment camp near Perambalur!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.2 அன்று குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்துகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதிகளை பதிவு செய்து காத்திருப்போர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெற்று தரும் நோக்கத்தோடு, இம்முகாமில் 75 -க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு வரை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும்,

தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், குவைத், ஓமன், அயர்லாந்து போன்ற நாட்டிற்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்பினை பயன்படுத்தி, தகுதியான நிறுவனங்களில் பணி நியமனங்களை பெற்று பயன் பெறலாம், என பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!