Day of the announcement of the meeting in Namakkal district consumer redressal
நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பாக மாதம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று மக்கள் குறைதீர்க்கப்படுகிறது.
இதன் படி நவம்பர் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 7ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 14ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22ம் தேதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு திருச்செங்கோடு செயற் பொறியாளர் அலுவலகத்திலும், 28ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.
இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிர்வர்த்தி பெறலாம் என தெரிவித்துள்ளார்.