ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களை கண்டறிய கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு!

schedule
2026-09-26 | 12:41h
update
2026-09-26 | 12:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Deadline extended for submitting views on identifying temples built according to Agama rules!

சென்னை ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றின் உத்தரவுகளின்படி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நிர்மானிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக அரசினால் 06.10.2025 அன்று 5 நபர்களை கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

Advertisement

திருக்கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குழுவினால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. ஆகமக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட 34,971 எண்ணிக்கையிலான திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள் துறையின் www.hrce.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இது குறித்த விவரங்களில் பொதுமக்கள் விடுதல் ஏதேனும் இருப்பின் அல்லது ஏதேனும் கருத்துரு இருப்பின், அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அதாவது 25.09.2026-க்குள் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது இதற்கான காலஅவகாசம் 10.10.2026 அன்று மாலை 5.45 மணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவும் 10.10.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் கருத்துகழள தெரிவிக்கலாம் எனஇந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.09.2026 - 12:58:24
Privacy-Data & cookie usage: