Demanding compensation for a cable TV worker who died due to electrocution near Perambar, the protest refused to buy the body!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அழகன் மகன் சுப்ரமணியன் (36). இவர் கேபிள் டிவி வயர்கள் இழுத்துக்கட்டும் வேலையை செய்து வந்தார். இவருக்கு சுமிதா என்ற மனைவியும், கிஷோர், கீர்த்தி என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று பீல்வாடி பகுதியில் கேபிள் டிவி வயர்களை இழுக்கும் பணியை சுப்பிரமணியனை செய்துள்ளார். அப்பொழுது சுப்பிரமணியன் அலுமினியம் ஏணி மூலம் மின்கம்பத்தில் ஏறி கேபிள் டிவி வயரை இழுத்து கட்டிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ
இடத்திலேயே சுப்ரமணியன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து முறை கேடாக மின்கம்பத்தின் வழியாக கேபிள் டிவி ஒயர்களை அமைக்க வலியுறுத்திய அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் சுப்ரமணியனுக்கு உரிய இழப்பீடு பெற்று தரக் கோரியும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!