கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி தரக் கோரி, பெரம்பலூரில் உண்ணாவிரத போராட்டம்

schedule
2016-11-07 | 12:20h
update
2026-06-12 | 23:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Demanding wages of poultry raising, the hunger strike In Perambalur

கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி தரக் கோரி, பெரம்பலூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோழி வளர்ப்பு விவாசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அச்சங்கத்தின் தலைவர் செல்வகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

போரட்டத்தில், வளர்ப்பு கூலியாக கிலோ ஒன்றுக்கு ரூ.10 வீதம் உயர்த்தி தர வேண்டியும், அனைத்த கம்பனிகளும் கோழிகள் வளர்ப்புக்கான கட்டணத்தை பாரபட்சம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும், கோழி பண்ணையில் உள்ள மீதமாகும் தீவனங்களை கோழி கம்பனிகளே திரும்ப எடுத்து கொள்ள வேண்டும், நபர்டு வழங்க வேண்டிய மானியத்தை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், வங்கி கடனுக்காக வளர்ப்புத் தொகை முழுத் தொகையும் பிடித்தம் செய்யாமல் பாதிக்கு மேற்பட்ட தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி உண்ணாவிரத போரட்டம் நடத்தினர்.

முன்னதாக துரைசாமி வரவேற்றார். அருளானந்தம், செல்வம், ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாடசாமி நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:24:32
Privacy-Data & cookie usage: