பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில், இந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2022-10-15 | 07:57h
update
2022-10-15 | 07:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Demonstration against the imposition of Hindi on behalf of DMK youth and students of Perambalur district!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு, மாவட்ட தி.மு.க.இளைஞரணி, மாணவரணி இணைந்து நடத்தும் இந்தி திணிப்பை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம், இன்று காலை நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர் , மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆர். முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமன குன்னம் சி. இராஜேந்திரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜ்குமார், பெரம்பலூர் எம்.எல்.ஏவும், பெரம்பலூர் நகர செயலாளருமான எம்.பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மகளிரணி மகாதேவி ஜெயபால், ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, வக்கீல் ராஜேந்திரன்,
டி.சி.பி. பாலு, மாநில மருத்துவரணி டாக்டர். வல்லபன்,

Advertisement

மாணவரணி மற்றும் இளைஞரணி பொறுப்பாகளர்கள் பெ.ராஜேஷ், தி.ராசா, அய்யலூர் விஜய், மற்றும் குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதாரமேஷ், அன்னமங்கலம் செல்வகுமார், கோனேரிப்பாளையம் குமார், துரை.காமராஜ், உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள்,

மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், கழக இளைஞரணி, மாணவரணியினர், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 02:24:19
Privacy-Data & cookie usage: