dengue is full control in Ramanathapuram district : Collector Natarajan

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு முழு கட்டுப்பாட்டில் உள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் கலெக்டர் நடராஜன் செய்தியாளர்கள் கூட்டத்தில் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 18 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர், என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்புபணியில் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதி சுகாதார மாவட்டங்களில் மொத்தம் 156 மருத்துவ அலுவலர்கள், 11 வட்டார சுகாதார மேற்பார்ைவயாளர்கள், 93 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் முலம் 360 பேர்களும் நகராட்சியில் 148 பேர்களும், பேருராட்சியில் 105 பேர்களும் என்ஆர் எச்எம் முலம் 50 பேர்கள் என மொத்தம் 663 பேர் டெங்கு தடுபு்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புகையடிக்கும் இயந்திரங்கள் 102 மற்றும் வாகனத்தில் வைத்து பயன்படுத்தும் புகை மருந்து தெளிக்கும் இயந்திரம் இரண்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உள்ளாட்சி அமைப்பின் முலமாக திடக்கழிவு திட்ட துாய்மைக்காவலர்கள் ஆயிரத்து 834 பேரும் ஊராட்சியில் ஊதியம் பெறும் சுகாதாரப்பணியாளர்கள் ஆயிரத்து 667 பேர்களும் உள்ளனர். மேலும் உள்ளாட்சி துறை செயலாளர்கள் அவசர அவசியம் கருதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களையும் டெங்கு ஒழிப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

காய்ச்சல் அறிகுறி உள்ள பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு, புகை மருந்து தெளிப்பு, மேல்நிலை நீர்தேக்கதொட்டிகளில் சுத்தம் செய்தல் மற்றும் குளோரினேசன், பெருவாரி துப்புரவுபணிகள் , மருத்துவ முகாம்கள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் என 6 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவை அனைத்தும் உள்ளாட்சி துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றன. நிதி பற்றாக்குறை உள்ள சிறு ஊராட்சிகளில் பொது நிதியிலிருந்து நிதி பெற்று இப்பணியினை தொய்வின்றி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் 30 படுக்கை வசதிகள் கொண்ட 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் அனைத்து அரசு மருத்துவுனைகளில் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவு செயல்பட்டு வருகின்றது. அனைத்து அரசு மருத்துவனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் ைவக்கப்பட்டுள்ளது. 10 தாலுகா மருத்துவமனைகள் மற்றும் 37 தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகள் குறித்த தகவல்களை சுகாதார ஆய்வாளர்களை அனுப்பி பெறப்பட்டு அதன் அடிப்படையில் தினசரி செயல்திட்டம் தயார் செய்யப்பட்டு களப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. முன்றாம் சுற்று இம்மாத முடிவிற்குள் வழங்கப்படஉள்ளது. அதிகப்படியான காய்ச்சல் உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவகுழு அனுப்பப்பட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தேசிய மாணவர் படையினர், நேரு யுவகேந்திரா தன்னார்வ தொண்டர்கள், நீதித்துறை அலுவலர்கள் ஆகியோர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மெற்கொள்ளப்பட்டு வருகின்றது.

துாய்மையே சேவை என்ற திட்டத்தின்படி ராமநாதபுரம்மாவட்டத்தில் கடந்த செப் 15 முதல் அக்.2ம் தேதி வரையிலான காலத்தில் அரசு துறைகளுக்கு சொந்தமான கட்டடங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது வெளிகளில் பரந்து கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிர முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இப்பணியின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஊரகப்பகுதிகளில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பை சேகரிப்பு மற்றும் அப்புறப்படுத்தும் பணியில் மக்கள் பங்கேற்பின் அவசியம் குறித்து ஆக.15, அக்.2 மற்றும் அக்.7 ஆகிய தேதிகளில் நடந்த கிராம சபை குட்டங்களில் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்.1 முதல் அக்.15ம் தேதி வரை துாய்மைக்கான இருவார இயக்கம் என்ற திட்டத்தி் கீழும் ஒட்டுமொத்த துாய்மைப் பணிக்கு முன்னுரிமை கொடுது்து பணி நடைபெற்று வருகிறது.

தற்போது ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களால் கழிவு செய்யப்படும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் குறிப்பி்ட்ட இடத்தில் கொட்டி இறதியாக்கம் செய்வதற்கு ஏதுவாக கக்ஷடுதல் எண்ணிக்கையில் சிமெண்ட் உறைகள் முலமான குப்பைத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேற்கொண்டு பொது மக்கள் தங்களால் உருவாக்கப்படும் குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே கொட்டுவது தெரியவந்தால் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இப்பணியை பொருத்தமட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று அனைத்து பகுதிகளிலும் கொசுவை உற்பத்தி செய்யக்குடிய கொசு புழுக்கள் வளர்ந்துள்ள இடங்கள் கண்டறிந்து அதனை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாரந்தோறும் வியாழக்கிழமை இதற்கான சான்றினை அந்தந்த துறை தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரிநேசன் செய்யப்படாமல் வழங்குவதன் முலம் வைரஸ் போன்ற பிற நோய் தொற்றை உருவாக்குடிய கிரிமிகள் இருக்கும் என்தால், குளோரினேசன் செய்யாமல் குடிநீர் வழங்ககுடாது என உத்தரவிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டிகள் அனைத்தையும் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்காங்கே தனியார் முலம் வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலவை உள்ளதால் என்பதை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதால் மரக்கன்றுகள் நடுவு செய்யும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான குழிகள் தோண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய முறையாக நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ள ஆலம், அரசு, புவரசு, வேம்பு, முருங்கை மற்றும் உதியன் போன்ற மரங்களின் கிளைகளை வெட்டி பதியம் முறையில் நடவு செய்வதற்காக ஒரு ஊராட்சிக்கு குறைந்தது 100 என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அக்.13 அன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கவுள்ள சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தன்று பரவலாக நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில் அதிகமாக மழை பெய்யும் பொழுது அதனை அதிக அளவில் சேகரிக்க நீர்நிலைகள் ஆழப்படுது்தி மராமத்து செய்ய திட்டமிடப்பட்டு இதுவரை ஆயிரத்து 526 ஊரணிகள் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முலம் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். உள்ளாட்சி துறை முலம் 51 இடங்களில் உள்ள ஊரணிகளை மேமம்பாடு செய்து ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப்பட்டுள்ளது.

தவிர தற்போது கடல்நீர் நிலப்பரபிற்குள் உட்புகாமல் தடுப்பதற்காக அதற்கு தகுதியான 10 இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் ரு.3.36 கோடி மதிப்பில் தரைமட்ட தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் ரு.2 கோடி மதிப்பில் 25 வரத்துக்கால்வாய், 60 கண்மாய்கள், 59 ஊரணிகள் ஆழப்படுத்தி மேமம்பாடு செய்திடவும் 11 இடங்களில் நீர் உறுஞ்சு குழிகள் அமைக்கவும் அனுமதிக்கபப்பட்டு தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பொது பணி துறையின் முலம் ரு.30.66 கோடி மதிப்பில் 91 கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி அக்கண்மாயில் உள்ள கழுங்கு மடைகள் சீரமைத்து கண்மாய் ஆழப்படுத்தி அதன்முலம் எடுக்கப்படும் மண்ணை கரைகளில் கொட்டி பலப்படுத்திட அனுமதிக்கப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணி துறையின் முலம் நீர்வள மற்றும் நிலவள திட்ட தலைப்பின் கீழ் ரு.20.51 கோடி மதிப்பில் 53 கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றி அக்கண்மாயில் கழுங்கு மடைகள் சீரமைத்து கண்மாய்கள் ஆழப்படுத்தும் பணிகளும் நடை பெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரை டெங்கு பாதிப்பு பெரிதாக ஏதுவும் இல்லை. இதுவரை 18 பேர்மட்டுமே டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அவர்களுக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 78 பேர் வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு வைரஸ் காய்ச்சல் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

– சிவசங்கரன், ராமநாதபுரம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!