டெங்கு கொசுப் புழு : பெரம்பலூரில் 250 நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்

schedule
2017-10-31 | 14:56h
update
2026-06-06 | 17:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Dengue mosquito worm: District administration notices 250 companies in Perambalur

பெரம்பலூரில் டெங்கு கொசுப் புழுக்கள் ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகை விதிக்க மற்றும் நோட்டீஸ் வழங்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வருகிறார்.

Advertisement

இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, அன்னை பர்வதம்மாள் மெட்ரிக் பள்ளி மற்றும் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகள் மற்றும் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு ஏதேனும் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ளதா என்று ஆய்வு செய்து, கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பு அளிக்காமல் பள்ளியின் அனைத்துப்பகுதிகளையும் சுத்தம் செய்து கொசு உற்பத்தியாகாத வகையில் பள்ளி வளாகங்களை பராமரிக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மேற்சொன்ன கல்வி நிறுவனங்களில் நீர் தேங்கும் வகையில் இருந்த பகுதிகளை ஒரு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்ட அவர் நோட்டீசும் வழங்கினார்.

இதுவரை 250 நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது அரசு அலுவலர் பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 17:24:14
Privacy-Data & cookie usage: