பெரம்பலூர்: மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது; மாவட்டதிமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை!

schedule
2026-03-11 | 06:52h
update
2026-03-11 | 06:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Deputy Chief Minister Udhayanidhi Stalin is being given a grand welcome when he visits Perambalur district; District DMK in-charge V. Jagatheesan reports!

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும், பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சி, பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் – திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு துறைமங்கலம் 3 ரோடு சந்திப்பில் காலை 9.00 மணிக்கு, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு 10.00. மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

Advertisement

பின்னர். 11.00 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தீரன் நகர் அருகில் உள்ள ராஜேஸ்வரி சின்னமனி திருமண மண்டபத்தில் நடைபெறும் பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் – கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்,
மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,நகர,பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 13:47:01
Privacy-Data & cookie usage: