பெரம்பலூர்: மாவட்ட திமுகவில் கூடுதலாக சேர்ந்த 50 ஆயிரம் பேருக்கு புதிய உறுப்பினர் அட்டை, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா வழங்கினார்!

schedule
2024-05-19 | 15:53h
update
2024-05-19 | 15:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Deputy General Secretary A. Raja gave new membership cards to 50,000 additional members of Perambalur District DMK!

பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க.வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை தலைமை கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை பொறுப்பாளர்களிடம் வழங்கினார். ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் புதிய உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டனர்.

Advertisement

மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் நகர திமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வக்கீல் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், பேரூர் செயலாளர்கள் ஏ.எஸ்.ஜாகீர்உசேன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், எம்.பிரபாகரன், ஆர்.அருண், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 16:00:07
Privacy-Data & cookie usage: