Details of rainfall recorded in Perambalur district!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், நான்கு ரோடு, கவுல்பாளையம், பேரளி, குன்னம், பாடாலூர், வேப்பந்தட்டை, கொளக்காநத்தம், செட்டிக்குளம், அம்மாபாளையம், வாலிகண்டபுரம், லப்பைக்குடிக்காடு,வி.களத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

திடீரென பெய்து வரும் இந்த கனமழையின் காரணமாக பொது மக்கள் உள்ளிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மின் பாதை வழித்தடங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்படலாமென பாதுகாப்பு கருதும் ஒருசில ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பு மீண்டும் மின்வினியோகம் செய்யப்படுகிறது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவாக மழையளவு விவரம்:

பெரம்பலூர் 15, செட்டிகுளம் 8, பாடாலூர் 18, அகரம்சிகூர் 3, லப்பைக்குடிக்காடு 13, புதுவேட்டக்குடி 4, எறையூர் 11, கிருஷ்ணாபுரம் 8, தழுதாழை 42, வி.களத்தூர் 13,
வேப்பந்தட்டை 25, என மொத்தம் 160 மி.மீ மழை பதிவாகி உள்ளது. சராசரி மழையளவு-14.55 மி.மீட்டராகும்.

விளம்பரம்: 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!